உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணையாற்றில் போர்வெல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

பெண்ணையாற்றில் போர்வெல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

நெல்லிக்குப்பம்: பெண்ணையாற்றில் போர்வெல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லிக்குப்பம் நகரத்தில் வசிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கபடுகிறது.இதற்காக 10 இடங்களுக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்கின்றனர். இந்த குடிநீர் நாளுக்கு நாள் தரம் குறைந்து வருகிறது.இதை சரி செய்ய குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 42 கோடி மதிப்பில் விஸ்வநாதபுரம் உட்பட 4 இடங்களில் பெண்ணையாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்தனர்.15 நாட்களுக்கு முன் விஸ்வநாதபுரம் பெண்ணையாற்றில் இதற்கான பூமி பூஜையை சேர்மன் ஜெயந்தி துவக்கி வைத்தார். அந்த பகுதி மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளோம்.ஆழ்துளை கிணறு அமைத்தால் நிலத்தடிநீர் பாதிப்பதோடு விவசாயம் கேள்வி குறியாகும்.எனவே ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த பணிக்காக பைப்புகள் ஏற்றி கொண்டு நேற்று காலை 3 லாரிகள் வந்தன.கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம்,மலையான் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது எனக்கூறி லாரிகளை சிறைபிடித்தனர். அங்கு வந்த நகராட்சி பணி மேற்பார்வையாளர் ரமேஷிடம் வாக்குவாதம் செய்தனர்.பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம் எனக்கூறி லாரிகளை சப் இன்ஸ்பெக்டர் உலகநாதன் திருப்பி அனுப்பினார்.இதனால் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை