உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ரயில்வே அதிகாரியை கண்டித்து போராட்டம்

 ரயில்வே அதிகாரியை கண்டித்து போராட்டம்

கடலுார்: கடலுாரில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரை கண்டித்து அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்ய வந்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி, மனு அளிக்க வந்த அரசியல் கட்சியினரை அவமதித்ததை கண்டிப்பது. கடலுார் நுகர்வோர் கோர்ட் திருவண்ணாமலைக்கு மாற்றம் செய்வதை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தி.மு.க.,-காங்.,-மா.கம்யூ.,-இந்திய கம்யூ.,-ம.தி.மு.க.,- வி.சி.,-மக்கள் நீதி மய்யம் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் வரும் 1ம் தேதி கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் போராட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை