உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊட்டச்சத்து பெட்டகம் கர்ப்பிணிகளுக்கு வழங்கல்

ஊட்டச்சத்து பெட்டகம் கர்ப்பிணிகளுக்கு வழங்கல்

பண்ருட்டி, : பண்ருட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மணம்தவிழ்ந்தபுத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் சதாசிவம் தலைமை தாங்கினார். டாக்டர்கள் செல்வம், பீரவீணா, தில்லைவாணி ஆகியோர் தாய்ப்பால் வழங்குவதின் அவசியம் குறித்து பேசினர். 50 கர்ப்பிணிகளுக்கு ரோட்டரி முன்னாள் உதவி ஆளுநர்கள் காமராஜ், ரவிசேகர் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கினார். முன்னாள் தலைவர்கள் முத்து சுப்பிரமணியன், மதிவாணன், நிஷா கேஷ்யுஸ் பாரதிதாசன், ஓய்வு பெற்ற மோட்டார் வாகன அலுவலர் பன்னீர்செல்வம், ஓய்வு பெற்ற சப் கலெக்டர் ராஜவேல், ராமலிங்கம், பொருளாளர் பழனிசாமி, விஸ்வநாதன், அரிகிருஷ்ணன் பங்கேற்றனர் . செயலாளர் அருள்பிரகாஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை