மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
16-Aug-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், ஜே.ஏ.சி., மற்றும் ஜே.சி.ஐ., பைப் டவர்ஸ் கிளை இயக்கம் சார்பில் ஆடியோ உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. பிராந்திய தலைவர் முரளி தலைமை தாங்கினார். மண்டல இயக்குனர் அன்வர் பாஷா, மண்டல ஒருங்கிணைப்பாளர் மாதவன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் மண்டல துணை தலைவர் மணிகண்டன் ஆடியோ உபகரணங்களை, தலைமை ஆசிரியர் வினோத் குமாரிடம் வழங்கினார். பின், ஆசிரியர் தின விழாவையொட்டி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. சுரேஷ் மாணவர்களின் வளர்ச்சி குறித்து பேசினார். ஜே.ஏ.சி., உறுப்பினர்கள் ஜெயபாலன், வேல்முருகன், கோபாலகிருஷ்ணன், ஆனந்த், அன்பழகன், வேல்மயில், மூர்த்தி, பொருளாளர் ராஜசேகரன், இயக்குனர் பாலகுமரன், இணை செயலாளர் சுரேந்தர் உட்பட பலர் பங்கேற்றனர். பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
16-Aug-2025
16-Aug-2025