மேலும் செய்திகள்
ரெகுநாதபுரத்தில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
03-Sep-2024
நடுவீரப்பட்டு: பண்ருட்டி குறுவட்ட விளையாட்டு போட்டிகள் குடியிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 32 பேரும், மாணவிகள் 34 பேர் கலந்து கொண்டனர். இதில்17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கைப்பந்து போட்டியில் மாணவிகள் முதலிடமும், 17 மற்றும் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவர்கள் 2ம் இடம்பிடித்தனர்.மேலும், வளையபந்து போட்டியில் தனிநபர் மற்றும் இரட்டையர் போட்டியில் மாணவிகள் தீபிகா, அஸ்வினி முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சியளித்த ஆசிரியை சுனிதா ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர்(பொறுப்பு) வெற்றிவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
03-Sep-2024