உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில அளவிலான செஸ் போட்டி புதுச்சேரி முதல்வர் துவக்கி வைப்பு

மாநில அளவிலான செஸ் போட்டி புதுச்சேரி முதல்வர் துவக்கி வைப்பு

கடலுார் : கடலுார் சி.கே.கல்லுாரியில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டியை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.கடலுார் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி, கடலுார் சி.கே. கல்லுாரி வளாகத்தில் நடந்தது. ஏழு வயது முதல் 17 வயது வரை பல்வேறு பிரிவுகளிலும், அனைத்து வயதினரும் பங்கேற்றனர்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.துவக்க விழாவிற்கு கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் செந்தில் பாரதி தலைமை தாங்கினார். ரோட்டரி முன்னாள் ஆளுநர் பிறையோன், உதவி ஆளுநர் வெங்க டேசன், நிர்வாகிகள் பூங்குன்றன், பட்டேல், ஒருங்கிணைப்பாளர் மதியழகன், திட்ட இயக்குனர் ராமநாதன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் விஜய் ஆனந்த் வரவேற்றார். புதுச்சேரி முதுல்வர் ரங்கசாமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தார்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி., ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். செயலாளர் சிவகுருநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ