ராமானுஜர் பிறந்தநாள்
சிதம்பரம் : சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், கணித மேதை ராமானுஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.தலைமையாசிரியர் சங்கரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை சுந்தரி முன்னிலை வகித்தார். முதுகலை கணித ஆசிரியை லலிதா வரவேற்றார். வல்லத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணித ஆசிரியர் செந்தில்குமார் சிறப்புரையாற்றி, மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். கணித ஆசிரியர்கள் ஜெயந்தி, பிரதீப்குமார், ரதி, வள்ளி உள்ளிட்டோர் கணித செயல்விளக்கம் அளித்தனர்.ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினார்.