உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் கடை கட்டடம் எம்.எல்.ஏ., திறப்பு

ரேஷன் கடை கட்டடம் எம்.எல்.ஏ., திறப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த புலியூர் ஊராட்சி, கன்னியங்குப்பம் கிராமத்தில், எம்.எல்.ஏ., நிதி ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ரேஷன் கடையை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார். பி.டி.ஓ., சங்கர், கூட்டுறவு அலுவலர் வினோத், கனகவள்ளி, கள அலுவலர் கஜேந்திரன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கனிமொழி பாலு, வெங்கடாஜலபதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பச்சமுத்து, காங்., வட்டார தலைவர் சாந்தகுமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சிராஜூதீன், லெனின், வினோத், வீரமுத்து, நாகராஜ், குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை