உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குளிர்சாதன தொப்பி எஸ்.பி., வழங்கல்

குளிர்சாதன தொப்பி எஸ்.பி., வழங்கல்

கடலுார் : கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு குளிர்சாதன தொப்பி, கூலிங் கிளாஸ் கண்ணாடியை எஸ்.பி., ஜெயக்குமார் வழங்கினார்.கடும் வெயிலை சமாளிக்கும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில் போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு குளிர்பானம் வழங்குவதை எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். தொடர்ந்து, போலீசாருக்கு ஸ்பான்சர்கள் மூலம் குளிர் சாதன தொப்பி, கூலிங் கிளாஸ் கண்ணாடி வழங்கினார்.டி.எஸ்.பி., ரூபன்குமார், வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அமர்நாத், சப் இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ