மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவி தற்கொலை
25-Jan-2025
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த மீன் கடைகள் அகற்றப்பட்டது.மந்தாரக்குப்பம் பழைய பஸ் நிலையம் அருகே சாலையில் போக்குவரத்து இடையூராக மீன் கடைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் மீன் கழிவுகளை பள்ளி அருகே கொட்டுவதால் துார்நாற்றம் வீசியது.இதுகுறித்த புகாரின்பேரில், என்.எல்.சி., நகர நிர்வாகம் சார்பில், என்.எல்.சி., பாதுகாப்பு படையினர் உதவியுடன் மீன் கடைகள் அகற்றப்பட்டது. மீண்டும் இப்பகுதியில் மீன் கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
25-Jan-2025