உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

 தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. சிறுபாக்கம் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு வருவாய் ஆய்வாளர் மற்றும் சார்ப்பதிவாளர் அலுவலகங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் ஸ்டேஷன், அரசு மேல்நிலைப் பள்ளி, வணிக வளாகங்கள் உள்ளதால் சுற்றுப்புற கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு தினசரி வந்து செல்கின்றனர். இந்நிலையில், சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில், தீ விபத்து, இயற்கை பேரிடரின் போது, 20 கி.மீ., துாரம் உள்ள வேப்பூர், 38 கி.மீ., துாரமுள்ள திட்டக்குடி தீயணைப்பு நிலையங்களின் தீயணைப்பு வீரர்கள் வர வேண்டியுள்ளது. தொலைவின் காரணமாக ஏற்படும் கால தாம தத்தால், அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், சிறுபாக்கத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !