மேலும் செய்திகள்
சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
26-Aug-2025
புதுச்சத்திரம்: ஆண்டார்முள்ளிப்பள்ளம்-அன்னப்பன்பேட்டை சாலையில், விபத்தை தவிர்க்க சாலையின் இருபுறமும் மண் அணைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம்-அன்னப்பன்பேட்டை இடையே 2024-25ம் ஆண்டில் முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நபார்டு வங்கி நிதி உதவியுடன் 2 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக சாலை அமைக்கப் பட்டது. இந்த சாலையின் பக்கவாட்டின் இருபுறமும், மண் அணைக்காததால் சாலை உயரமாக உள்ளது. இதனால் பஸ், லாரி போன்ற வாகனங்களை, எதிரில் வரும் கார், பைக் போன்ற வாகனங்கள் கடக்க முடியாமல், சாலை ஓரம் செல்லும் போது, கீழே விழுந்து, அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை உள்ளது. எனவே, சாலையில், இருபுறமும் கிராவல் அல்லது சவுடு மண் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள் ளனர்.
26-Aug-2025