உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தாமரை குளத்தை துார்வார கோரிக்கை

 தாமரை குளத்தை துார்வார கோரிக்கை

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி தாமரைக்குளத்தை, துார் வார கோரிக்கை எழுந்துள்ளது. குறிஞ்சிப்பாடி - புவன கிரி சாலையில், குறிஞ்சிப் பாடி பேரூராட்சிக்கு சொந் த மான தாமரைக்குளம் உள்ளது. இங்கு தினசரி குறிஞ்சிப்பாடி நகரவாசிகள் அதிகாலையில் குளத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். குளத்து நீரில் அதிக அளவில் செம்பு புற்கள் முளைந்து காணப்படுகின்றன. மேலும், நடைபாதை முறையான பராமரிப்பு இன்றி, விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக நடைபயிற்சி மேற்கொள்வோர் கூறுகின்றனர். குளத்தை முறையாக துார் வாரி, நடை பாதையை சீரமைத்து, பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி