உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 5.74 கோடி மோசடி ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர் கைது

 சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 5.74 கோடி மோசடி ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர் கைது

நெய்வேலி: நெய்வேலியில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 5.74 கோடி மோசடி செய்த ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், நெய்வேலி, இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழ்வேந்தன்,61; ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர். இவர், புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சீட்டு நிறுவனத்தின் கடலுார் மாவட்ட தலைவராக பணிபுரிந்தார். இவர், பொதுமக்கள் பலரிடம், குறிப்பிட்ட தொகை சீட்டு கட்டினால் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்ததாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் தமிழ்வேந்தனை நேற்று பிடித்து விசாரணை நடத்தினார். அதில், 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை, வடலுார், நெய்வேலி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 558 பேரிடம் 5 கோடியே 74 லட்சம் ரூபாயை திருப்பி தராமல் மோசடி செய்தது தெரிந்தது. மோசடி சீட்டு நிறுவனத்தின் கிளைகள் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கி வருவதும், என்.எல்.சி., அதிகாரிகள், சொசைட்டி தொழிலாளர்கள் மட்டுமின்றி, முக்கிய அரசியல் பிரமுகர்களும் பணம் கொடுத்து ஏமாற்றியதும் தெரிந்தது. இதையடுத்து தமிழ்வேந்தனை போலீசார் கைது செய்து, மேலும், சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ