உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீஸ்காரர் மீது பைக்கை மோதிய சிறுவர்களால் பரபரப்பு

போலீஸ்காரர் மீது பைக்கை மோதிய சிறுவர்களால் பரபரப்பு

கடலுார்: போலீஸ்காரர் மீது சிறுவர்கள் குடிபோதையில் பைக்கை மோதியதால் பரபரப்பு நிலவியது.கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள கும்தாமேடு தரைப்பாலத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சுந்தர்ராஜன் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி 2 பேர் வந்த பைக்கை நிறுத்த முயன்றார். ஆனால், பைக் ஓட்டியவர் பைக்கை நிறுத்தாமல் சுந்தர்ராஜன் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார்.இதில், தலையில் காயமடைந்த அவரை அருகில் இருந்த சக காவலர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின், சிறுவர்கள் இருவரையும் பிடித்து கடலுார், புதுநகர் போலீசில் ஒப்படைத்து புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், விசாரணை நடத்தியதில், இருவரும் தேவனாம்பட்டிணத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பதும், குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதும் தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ