உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆற்று மணல் திருட்டு: டிராக்டர் பறிமுதல் 

 ஆற்று மணல் திருட்டு: டிராக்டர் பறிமுதல் 

கடலுார்: ஆற்றுமணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டரை புதுநகர் போலீசார் பறிமுதல் செய்தனர். கடலுார் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஸ்டம்ஸ் ரோடு அருகே தென்பெண்ணையாற்றில் மர்மநபர்கள் டிராக்டர் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டனர். போலீசாரைப் பார்த்ததும் அந்த நபர்கள் டிராக்டரை விட்டுவிட்டு தப்பியோடினர். ஆற்றுமணலுடன் நின்றிருந்த டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்த புதுநகர் போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ