வெள்ளத்தில் சாலையோரம் மண் அரிப்பால் விபத்து அபாயம்
நெல்லிக்குப்பம்: விஸ்வநாதபுரம் மழையில் அடித்து செல்லப்பட்ட சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டுமென கோரியுள்ளனர்.நெல்லிக்குப்பம் பகுதியில் 15 நாட்களுக்கு முன் சாத்தனுார் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரால் தொன்பெண்ணையாற்றில் வெள்ள நீர் கரைபுறண்டு ஓடியாது. இதில் வான்பாக்கம்,முள்ளிகிராம்பட்டு,விஸ்வநாதபுரம் பகுதிகளுக்கு செல்லும் சாலையை கடந்து தண்ணீர் வேகமாக சென்றது.இதில் சாலையோரம் இருந்த மண் அடித்து செல்லப்பட்டு சாலையின் இருபுறமும் பள்ளமானது.அதில் வான்பாக்கம் சாலையில் உடனடியாக கிராவல் கொட்டி பள்ளங்களை மூடி சரி செய்தனர்.ஆனால் விஸ்வநாதபுரம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய சொல்லி கவுன்சிலர் பன்னீர்செல்வம் நகராட்சி கமிஷ்னரிடம் புகார் அளித்தார்.உடனடியாக அதை சரி செய்ய சேர்மன் ஜெயந்தி,கமிஷ்னர் கிருஷ்ணராஜன் ஆகியோர் இன்ஜினியர் வெங்கடாஜலத்திடம் கூறினர்.ஆனால் அதிகாரிகளுக்குள் நடக்கும் ஈகோ பிரச்னையால் இதுவரை சரி செய்யாமல் உள்ளனர். இதானல் எதிரே நான்கு சக்கர வானங்கள் வந்தால் வாகனங்கள் சாலை ஓரம் ஒதுங்க மடியாத விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே அதிகாரிகள் ஈகோ பார்க்காமல் உடனடியாக சாலையை சரி செய்வது நல்லது.