மேலும் செய்திகள்
புகைப்பட உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்
26-Jan-2025
சிதம்பரம் : சிதம்பரத்தில்தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் சந்தியாகு தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாநில துணைத் தலைவர் தெய்வராஜ் துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் கருப்பையன் அறிக்கை வாசித்தார். மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக சாலையோர வியாபாரிகளைபலவந்தமாக அப்புறப்படுத்துவதை கைவிட்டு, வெண்டிங்கமிட்டியில் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கி வந்த பி.எம்., ஸ்வா நிதியை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
26-Jan-2025