வாக்காளர்களை கவர்ந்த ரோபா
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் வாக்காளர்களை வித்தியாசமாக ரோபோ வரவேற்றதை மக்கள் ரசித்து பார்த்தனர்.நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் தேர்தலுக்காக 38 பூத்துகள் அமைக்கப்பட்டிருந்தன.அதில் சில பூத்துகளில் பலுான்கள், திரை சீலைகள் கட்டியும் ஏர்கூலர் போன்ற வசதிகளையும் செய்திருந்தனர். டேனிஷ்மிஷன் பள்ளியில், 6 பூத்துகளில் ஓட்டு போட்டனர். இங்கு வித்தியாசமாக வாக்காளர்களை ரோபோ இயந்திரம் வரவேற்றது. பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஓட்டு போட வந்துள்ள உங்கள் பெயர் என்ன என கேட்டது. அதற்கு பதில் கூறியதும் ஜனநாயக கடமையை ஆற்றியதற்கு நன்றி என கூறி பெண்களுக்கு பூக்களையும்,ஆண்களுக்கு மிட்டாய்களையும் வழங்கியது.இந்த புதுமாதிரியான வரவேற்பை வாக்காளர்கள் ரசித்து பார்த்தனர்.