உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயி வங்கி கணக்கில் ரூ.1.44 லட்சம் அபேஸ்

விவசாயி வங்கி கணக்கில் ரூ.1.44 லட்சம் அபேஸ்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பகுதியில் விவசாயியின் வங்கி கணக்கில் இருந்து 1.44 லட்சம் ரூபாய் அபகரித்த சைபர் கிரைம் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநற்குணத்தை சேர்ந்தவர் அருள்பிரகாசம், 53; விவசாயி. இவரது வங்கி கணக்கில், நெல் விற்பனை செய்த 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் இருந்தது. அவரது வங்கி கணக்கில் இருந்த பணத்தை சைபர் கிரைம் குற்றவாளிகள் எடுத்தனர்.இதேபோன்று, சோழத்தரத்தைச் சேர்ந்த வெண்ணிலா, 35; என்பவரின், வங்கி கணக்கில் இருந்த 3,600 ரூபாய் உட்பட அப்பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுபோனது.இதில், அனைவரது மொபைல் எண்ணும் ஒரே தனியார் நிறுவனத்தை சேர்ந்தது. இதனால், ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டோர் நேற்று சேத்தியாத்தோப்பில் உள்ள அந்த தனியார் நிறுவன சிம்கார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.இது குறித்த புகார்களின்பேரில், கடலுார் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். விசாரணையில், சிம்கார்டு மூலம் சைபர் கிரைம் குற்றவாளிகள் பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை