உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.3 லட்சம் கேமராக்கள் திருட்டு விருதை ஸ்டூடியோவில் துணிகரம்

ரூ.3 லட்சம் கேமராக்கள் திருட்டு விருதை ஸ்டூடியோவில் துணிகரம்

விருத்தாசலம் : விருத்தாசலம் ஸ்டூடி யோவில் 3 லட்சம் மதிப்பிலான கேமராக்கள், கம்ப் யூட்டர் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சித்தேரிகுப்பத்தை சேர்ந்தவர் கல்யாணமுருகன். விருத்தாசலம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்டூடியோ வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வழக்கம் போல கடையை பூட்டிச் சென்றார். நேற்று காலை 8:30 மணிக்கு கடையின் பூட்டு உடைந்து, கதவு திறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவர் வந்து பார்த்தார். உள்ளே சென்று பார்த்த போது, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1 கேமரா, ஒரு வீடியோ கேமரா, வீடியோ கேபிள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. தகவலறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் குமாரி உள்ளிட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், கடையின் ஒருபுற ஷட்டர் பூட்டை அறுத்து, உட்புறம் இருந்த கண்ணாடியை உடைத்து மர்ம நபர் உள்ளே நுழைந்து திருடியதும் தெரிந்தது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் கூப்பர், ஸ்டூடியோவில் இருந்து அருகிலுள்ள அரசு டாஸ்மாக் கடை வரை சென்றது. இதுகுறித்து கல்யாணமுருகன் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதே ஸ்டூடியோவில் கடந்த ஜன., 6ம் தேதி இரவு இரண்டு கேமராக்கள், ஒரு வீடியோ கேமரா, 10 பென் டிரைவ் திருடுபோனது. ஆனால், இதுநாள் வரை திருடுபோன பொருட்கள் மீட்கப்படவில்லை. டிராவல் பேக் பறிமுதல் திருட்டு நடந்த ஸ்டூடியோ வாசலில் ஒரு டிராவல் பேக் கிடந்தது. அதிலிருந்த ஒரு மருந்து சீட்டை போலீசார் கைப்பற்றினர். மேலும், நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தபோது, அங்கு மர்ம நபர் மதுபோதையில் உறங்கியுள்ளார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரித்து வருகின்றனர். டிராவல் பேக் பறிமுதல் திருட்டு நடந்த ஸ்டூடியோ வாசலில் ஒரு டிராவல் பேக் கிடந்தது. அதிலிருந்த ஒரு மருந்து சீட்டை போலீசார் கைப்பற்றினர். மேலும், நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தபோது, அங்கு மர்ம நபர் மதுபோதையில் உறங்கியுள்ளார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை