உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ. 53 ஆயிரம் பறிமுதல்

 ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ. 53 ஆயிரம் பறிமுதல்

திட்டக்குடி: உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ. 53 ஆயிரத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டசபை தேர்தல் தேதியையொட்டி, மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர், தீவிர வாகன சோதனையில் ஈடு பட்டு வருகின்றனர். அதன்படி, திட்டக்குடி - ராமநத்தம் நெடுஞ்சாலையில், பெரங்கியத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு அலுவலர் கிரிஸ்டோ அலிபர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் நேற்று பகல் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பகல் 1:00 மணியளவில் திட்டக்குடி நோக்கி சென்ற காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், பெத்தசமுத்திரம் பாலகிருஷ்ணன் என்பவர், உரிய ஆவணமின்றி 53 ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் கண்காணிப்பு குழுவினர், திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை