உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இறைச்சி கடைகளில் விற்பனை அமோகம் 

இறைச்சி கடைகளில் விற்பனை அமோகம் 

கடலுார்: கடலுாரில் தீபாவளி பண்டிகையொட்டி இறைச்சி கடைகளில் விற்பனை களை கட்டியது.தீபாவளி பண்டிகையன்று வீடுகளில் இறைச்சி சமைப்பது வழக்கம். இதனையொட்டி தீபாவளி பண்டிகையான நேற்று இறைச்சி கடைகளில் வழக்கத்தை விட அதிகளவில் இறைச்சிகளை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்தனர்.கடலுார் துறைமுகம், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், செம்மண்டலம், சாவடி, கோண்டூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அலைமோதியது. இதனால் விற்பனை களை கட்டியது. ஆட்டு கறி கிலோ 800 ரூபாய், 900 ரூபாயும், கோழிக் கறி 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ