உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளைநிலம் காப்போம் நிகழ்ச்சி

விளைநிலம் காப்போம் நிகழ்ச்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், குமாராட்சி வட்டாரத்தில் உள்ள கானுார், டி. அருண்மொழிதேவன், மதுரசூடாமணி ஆகிய கிராமங்களில், விளைநிலம் காப்போம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை வேளாண் அறிவியல் நிலைய தலைவர் நடராஜன் துவக்கி வைத்து, மண் வளம் பாதுகாக்கும் வழிமுறைகளை விளக்கினார். பேராசிரியர்கள் சுஜெய்வேலு, சத்தியநாராயணன், கலைச்செல்வி நிலங்களின் சத்துக்களுக்கு ஏற்றவாறு உர பரிந்துரை, யூரியா, டி.ஏ.பி அதிகமாக பயன்படுத்துவதால் நிலத்திற்கு ஏற்படும் தீமைகளை விளக்கினர். மேலும், உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்கள், தொழு உரங்கள் பயன்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் மண்ணில் பேரூட்டம் மற்றும் நுண்ணுாட்ட சத்துக்கள் மேம்பாடு மற்றும் மண்ணிற்கு உரமிடும்போது மண்வள அட்டையில் பரிந்துரைத்த உர பரிந்துரைகளை மேற்கொள்ள அறிவுருத்தினர். வேளாண் அலுவலர்கள் மத்திய, மாநில திட்டங்கள் குறித்து விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை