மேலும் செய்திகள்
கவிதை, பேச்சுப்போட்டி; மாணவர்களுக்கு அழைப்பு
01-Oct-2025
கடலுார் : பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடக்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும், தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழில் பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் நடத்தப்படுகிறது. கவிதை, கட்டுரைப் பேச்சுப் போட்டிகளுக்கு மூன்று பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசு 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு 7,000, மூன்றாம் 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு வரும் 14ம் தேதியும், கல்லுாரி மாணவர்களுக்கு மறுநாள் 15ம் தேதியும் கடலுார், திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளிகளில் போட்டிகள் காலை 9:00 மணிக்கு நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான போட்டிக்கு பள்ளி நிலையிலேயே போட்டி கள் நடத்தி ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து, முதன்மைக் கல்வி அலுவலருக்கு பெயர் பட்டியல் அனுப்ப வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலரால் இறுதி செய்யப் பெற்ற பட்டியலில் உள்ள போட்டியாளர்கள் தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும் போட்டிகளில் பங்கேற்கலாம். கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிக்கு ஒவ்வொரு கல்லுாரியிலும் அந்தந்த கல்லுாரி முதல்வர்களே ஒரு போட்டிக்கு 2 பேர் எனக் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப வேண்டும். போட்டிகளின் தலைப்புகள் போட்டி நடக்கும் நேரத்தில் போட்டியாளர்கள், நடுவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் விவரங்கள் gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
01-Oct-2025