உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி

 விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி

விருத்தாசலம்: சின்னகுமட்டி கிராமத்தில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், எண்ணெய்வித்து பயிர்களில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியில், திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் கலந்துகொண்டு, எண்ணெய்வித்து பயிர்களில் சாகுபடி தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், விதைநேர்த்தி, உயிர் உரங்கள், நோய் எதிர் உயிர் கொல்லி விதைநேர்த்தி, களைநிர்வாகம், ஜிப்சம் மற்றும் மண் அனைத்தல் பயன்பாடு, வேம்பு பொருட்கள் கொண்டு பூச்சிநோய் பாதுகாப்பு, தமிழ்நாடு வேளாண் பல்கலை., பயிர் ஊக்கி நிலக்கடலை ரிச் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலை., இணையதளபயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கினார். மேலும், பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக் குனர் நந்தினி, மத்திய, மாநில திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். இதில், கிராம விவசாயிகள் பலர் பங்கேற் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ