மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு கூட்டம்
கடலுார்: கடலுார் மூத்த குடிமக்கள் நல கூட்டமைப்பு சார்பில் பொங்கல் விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சேகர் வரவேற்றார். பொருளாளர் கருணாநிதி நிதிநிலை அறிக்கையை வாசித்தார். திருக்குறள் பேரவை பாஸ்கரன், தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். பேராசிரியர் நடராஜன், நெல்லிக்குப்பம் மூத்த குடிமக்கள் அமைப்பு தலைவர் பாஸ்கரன், தடகள போட்டி தலைவர் தமிழ்ச்செல்வன், பரத்வேல் வாழ்த்துரை வழங்கினர்.