சித்தா மருந்துகள் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி
சிறுபாக்கம் ; மங்களூர் அரசு வட்டார மருத்துவமனையில் சித்தா மருந்துகள் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதியடைகின்றனர்.சிறுபாக்கம் அடுத்த மங்களூர் அரசு வட்டார மருத்துவமனையில், மலையனுார், எம்.புதூர், எஸ்.நரையூர், வள்ளிமதுரம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இங்குள்ள சித்தா பிரிவில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான வலி நிவாரணி, சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு நோயாளிகளுக்கான மருந்துகள் இல்லை. இதனால், பல கி.மீ., தூரம் பயணித்து சிகிச்சை வருவோர், சிகிச்சைக்கான மருந்துகள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, மங்களூர் அரசு வட்டார மருத்துவமனையில் சித்தா மருந்துகள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.