உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பம் பிரச்னைக்கு தீர்வு சாலை பணி மீண்டும் துவக்கம்

நெல்லிக்குப்பம் பிரச்னைக்கு தீர்வு சாலை பணி மீண்டும் துவக்கம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் பிரச்னை முடிந்து சாலை போடும் பணி துவங்கியது.நெல்லிக்குப்பம் நகராட்சி 5 வது வார்டு அங்காளம்மன் கோவில் தெருவில் அங்காளம்மன் கோவில் அருகே மண் சாலையாக இருப்பதை சிமென்ட் சாலையாக போடும் பணி ஒரு மாதத்துக்கு முன் துவங்கியது.சாலை போடும் இடம் அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான இடமாகும். எனவே அங்கு சாலை போட கூடாது என கோவில் நிர்வாகத்தினர் சாலை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பணி நிறுத்தப்பட்டது.சாலை பணியை நிறுத்திய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் கோவிலுக்கு பூட்டு போடுவது உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதால் நேற்று மீண்டும் சாலை போடும் பணி துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை