உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பழனிசாமியை முதல்வராக்குவதே இலக்கு சொரத்துார் ராஜேந்திரன் பேச்சு

பழனிசாமியை முதல்வராக்குவதே இலக்கு சொரத்துார் ராஜேந்திரன் பேச்சு

கடலுார்: கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குள்ளஞ்சாவடியில் நடந்தது. கூட்டத்தில், கட்சி வளர்ச்சி, உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கியதை சரி பார்த்தனர், விடுபட்டவர்களுக்கு உரிமை சீட்டு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் பேசியதாவது:அ.தி.மு.க., நிர்வாகிகள்,தங்களிடம் உள்ள உறுப்பினர் உரிமை சீட்டை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுத்து அதற்கு அத்தாட்சியாக கையெழுத்து பெற வேண்டும். நமது மாவட்டம் அனைவருக்கும் உறுப்பினர் உரிமை சீட்டை வழங்கி 100 சதவீதம் வழங்கிய மாவட்டம் என்று கடலுார் தெற்கு மாவட்டம் பெயர் பெற வேண்டும்.விடியா தி.மு.க., அரசில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக மக்கள் ஏராளமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது. மின்கட்டணம் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் விடியா தி.மு.க., அரசு நிறுத்திவிட்டது. மகளிருக்கு உரிமை தொகை தருகிறேன் என்று ஆயிரம் ரூபாய் தந்துவிட்டு மாதத்திற்கு 3 ஆயிரத்திற்கு மேல் மக்களிடம் அரசு வரிகளை உயர்த்தி திரும்ப வாங்குகின்றது.பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினால், எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. மக்கள் இந்த ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இந்த சூழ்நிலையை நாம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.நமது இலக்கு, வரும் சட்டசபை தேர்தலில் வென்று, பழனிசாமியை முதல்வராக்குவது ஒன்றே.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ