உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆல்பேட்டை செக்ஸ்போட்டில் எஸ்.பி., அதிரடி ஆய்வு

ஆல்பேட்டை செக்ஸ்போட்டில் எஸ்.பி., அதிரடி ஆய்வு

கடலுார்: புதுச்சேரி மாநில மதுபாட்டில் கடத்தலை தடுக்க, ஆல்பேட்டை செக்ஸ்போட்டில், எஸ்.பி., தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.கடலுார் மாவட்டத்தில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க ஆல்பேட்டை உள்ளிட்ட 5 இடங்களில் மதுவிலக்கு சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில எல்லையில் உள்ள சாலைகளில் 14 குழுக்கள் அமைக்கப்பட்டு வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கடலுார் ஆல்பேட்டை சோதனைசாவடியில் எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, புதுச்சேரியில் இருந்து ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கடத்தி வந்த மதுபாட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்கள் கடத்தியவர்கள் மீது வழக்கு பதிந்து கடலுார் மதுவிலக்கு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ