உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கிருத்திகை சிறப்பு பூஜை.

 கிருத்திகை சிறப்பு பூஜை.

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வீரபத்திர சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு ஹோமம் நடத்தி 108 சங்காபிஷேகம் நடந்தது. மூலவர் வள்ளி தேவசேனா சமேதராக சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை லோகு குருக்கள் செய்தார். அருள்தரும் அய்யப்பன் கோவில், பூலோகநாதர், வரசித்தி விநாயகர் கோவில்களிலும் பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை