காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் துவக்கம்
பண்ருட்டி: பண்ருட்டி அரசு மருத்துவமனையில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் துவங்கியது.பண்ருட்டி அரசு மருத்துவமனையில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், காசநோய் இல்லா தீவிர காசநோய் கண்டறியும் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் கருணாகரன் துவக்கி வைத்தார். பண்ருட்டி அரசு தலைமை டாக்டர் மாலினி முன்னிலை வகித்தார்.இதில் காசநோயால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், நீரிழிவு நோயாளிகள், காசநோயாளிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் நவீன எக்ஸ்ரே மூலம் காசநோய் பரிசோதனைக்கான எக்ஸ்ரே, சளி பரிசோதனை செய்தனர்.காசநோயாளிகளுக்கு பண்ருட்டி தொண்டு நிறுவன தலைவர் லோகநாதன், செயலாளர் மணிகண்டன்பிரபு ஆகியோர் ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர். இதில் காசநோய் பணியாளர்கள் நடராஜ், சரஸ்வதி, ஸ்ரீதர், ஜெய்ஸ்ரீ கிருஷ்ணகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.