ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி துவக்க விழா
புதுச்சத்திரம் : பெரியப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி துவக்க விழா நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வகையில், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதையொட்டி பெரியப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஸ்போக்கன் இங்கிலீஷ் துவக்க விழா நேற்று நடந் தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சவுந்தரவல்லி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் சுப்ரமணியன், காயத்ரிதேவி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கு, பயிற்சி அளித்தனர். ஆசிரியர்கள் இளவரசி, கவு ரி, சுவேதா உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஆசிரியர் தியாகராஜன் நன்றி கூறினார்.