மேலும் செய்திகள்
விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் உற்சாகம்
04-Feb-2025
கிள்ளை; சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில் 2024-2025ம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டு போட்டி நடந்தது.கைப்பந்து, கபடி, கோ கோ, இறகு பந்து, சதுரங்கம், எரிபந்து உள்ளிட்ட போட்டிகள் துவங்கி நடந்து வருகிறது. விளையாட்டு போட்டியை, கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் (பொறுப்பு) தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். விளையாட்டு போட்டி துவங்கி தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும். உடற்கல்வி துறை இயக்குநர் நாராயணசாமி, குறியிட்டாளர் அப்துல் ரசாக் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
04-Feb-2025