உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் துவக்கம்  

மாநில ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் துவக்கம்  

கடலுார்:கடலுாரில், தமிழ்நாடு மாநில ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி துவங்கியது. கடலுார் ரங்ரூப் மகாலில் துவங்கிய போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 293 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, விளைாடினர். வரும் 26ம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டியை ஜெய் மகாவீர் ஜூவல்லரி உரிமையாளர் அசோக்குமார் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு மாநில சதுரங்க கழக துணைத் தலைவர் ஸ்ரீவத்சன், இணை செயலாளர் செந்தில்குமார் பங்கேற்றனர். மாவட்ட சதுரங்க கழக தலைவர் ரமேஷ் மங்கள் சந்த், செயலாளர் ரூபவேல், பொருளாளர் வினோத், கடலுார் தாலுகா சதுரங்க செயலாளர் பாஸ்கர் பங்கேற்றனர். இதில் தேர்வாகும் 4 பேர் வாரணாசியில் நடைபெறும் தேசிய போட்டியில் பங்கேற்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை