மேலும் செய்திகள்
குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
24-Sep-2025
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சேத்தியாத்தோப்பு கடைவீதி, வடக்கு மெயின்ரோடு, மேல்நிலைப்பள்ளி சாலை, சந்தைந்தோப்பு வளாகம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இப்பகுதிகளில் இறைச்சி கடைகள் அதிகளவில் உள்ளதால் இறைச்சி கழிவுகளை சாப்பிட அதிகளவில் நாய்கள் குவிகின்றன. நாய்களால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி காயமடையும் சம்பவம் அடிக்கடி அரங்கேறுகிறது. சில நேரங்களில் நாய்கள் துரத்துவதால் சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அச்சமடைகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாய்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24-Sep-2025