உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலுார்; கடலுார் மாநகராட்சி அலுவலகம் முன், தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.ஐ.டி.யூ.சி., தலைவர் பாலு தலைமை தாங்கினார். தங்கராசு, ஜெயசீலன், ஜாபர் அலி, செல்வம், ரஜினி முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ.,மாவட்ட செயலாளர் துரை, மாநில தலைவர் சந்திரகுமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொதுச்செயலாளர் குணசேகரன், செயலாளர் சுப்ரமணியன், என்.எப்.டி.இ., தேசிய செயலாளர் ஸ்ரீதர் மற்றும் ஜெயராஜ், அரசு பணியாளர் சங்க சுந்தரராஜா, மாதர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் வளர்மதி வாசுகி உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், தெரு வியாபாரிகளை பாதுகாத்திட தமிழக அரசு தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாநகர விற்பனைக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். மாற்று இடம் வழங்காமல் தெரு வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !