உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்லுாரி பஸ்- வேன் மோதல் மாணவர்கள் தப்பினர்

கல்லுாரி பஸ்- வேன் மோதல் மாணவர்கள் தப்பினர்

திட்டக்குடி: திட்டக்குடி அருகே தனியார் கல்லுாரி பஸ்-மகேந்திரா பொலிரோ பிக்கப் வேன் மோதியதில் டிரைவர்கள் படுகாயமடைந்தனர். மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திட்டக்குடி - இ.கீரனுார் சாலையில் நேற்று காலை 9:00 மணிக்கு தனியார் கல்லுாரி பஸ் மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. திட்டக்குடி அடுத்த பெருமுளை அருகே வந்த போது அவ்வழியே வந்த மகேந்திரா பிக்கப் வேன், பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதி ல், இரு டிரைவர்களும் காயமடைந்தனர். மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த திட்டக்குடி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ