உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாணவர்கள் செல்லும் பாதை கல்வெர்ட்டில் திடீர் பள்ளம்

 மாணவர்கள் செல்லும் பாதை கல்வெர்ட்டில் திடீர் பள்ளம்

நெல்லிக்குப்பம்: கீழ்பட்டாம்பாக்கம் அரசு பள்ளிக்கு செல்லும் பாதை கல்வெர்ட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள் வாங்கியது. நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் பாதையில் குறுக்கே கழிவுநீர் செல்லும் கல்வெர்ட் உள்ளது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடைப்பு ஏற்பட்டு உள் வாங்கியது. மாணவர்கள் கல்வெர்ட்டில் ஏற்பட்ட பள்ளம் தெரியாமல் சைக்கிளில் செல்லும்போது விழுந்து காயம் அடைகின்றனர். அப்பகுதி அண்ணா நகர் மக்களும் இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, கல்வெர்ட் பள்ளத்தை மூடி சரிசெய்ய பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி