உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதையில் அரசு டவுன் பஸ் சாலை நடுவே திடீர் பழுது

விருதையில் அரசு டவுன் பஸ் சாலை நடுவே திடீர் பழுது

விருத்தாசலம்: விருத்தாசலம் கடைவீதியில் பயணிகளை ஏற்றி வந்த அரசு டவுன் பஸ் திடீரென பிரேக் டவுன் ஆனதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து ராஜேந்திரபட்டிணம், கருவேப்பிலங்குறிச்சி வழியாக விருத்தாசலம் நோக்கி வந்த தடம் எண் 19 என்ற அரசு நேற்று வந்து கொண்டிருந்தது. 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். விருத்தாசலம் கடை வீதி நான்குமுனை சந்திப்பு அருகில் வந்த போது, பிரேக் டவுன் ஆகி, சாலையின் நடுவே நின்றது. .பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். பின், பொதுமக்கள், இளைஞர்கள் சேர்ந்து பஸ்சை, சாலையோரமாக நிறுத்தினர். பின், மெக்கானிக் வரவழைக்கப்பட்டு, பஸ் எடுத்து செல்லப் பட்டது. இதனால், 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை