உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குண்டும் குழியுமான சாலையால் அவதி  

 குண்டும் குழியுமான சாலையால் அவதி  

சேத்தியாத்தோப்பு: சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேத்தியாத்தோப்பு அருகே, வி.கே.டி., சாலையில் கோதண்டவிளாகம் பஸ்நிறுத்தத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் துாரம் உள்ளே செல்லும் தார் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலை தற்போது ஜல்லிகள் பெயர்ந்து, ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறி உள்ளது. தார்சாலை மண்சாலையாக மாறி ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் அப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை