மேலும் செய்திகள்
பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
30-Oct-2024
கடலுார்: கடலுார் திருப்பாதிரிபுலியூரில் உள்ள பாடலீஸ்வரர் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகர் சன்னதிஉள்ளது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த 2ம் தேதி துவங்கி தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்து வந்தது. நேற்று முன்தினம் சண்முகர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. பின்னர், வள்ளி தேவசேனா சமேத சண்முகருக்கு மஹா அபிஷேகம் நடந்தது. விழாவில் உபயதாரர் ஜி.ஆர்.கே.,குழுமம் நிர்வாக இயக்குனர் துரைராஜ், மற்றும் கோமதி துரைராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் சுப்பிரமணியம், வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இரவு சூர சம்ஹார விழா நடந்தது. பூஜைகளை நாகராஜ் குருக்கள், ராகேஷ் குருக்கள் ஆகியோர் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
30-Oct-2024