பொறுப்பேற்பு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக எழிலரசி நேற்று பொறுப்பேற்றார். சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் சிதம்பரம் நகர போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் மது விலக்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் எழிலரசி சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.