உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் கடைகள் மூடல்

டாஸ்மாக் கடைகள் மூடல்

வடலூர்:வி.சி., கட்சி மாநாடு காரணமாக வடலூர் சுற்றுப்பகுதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் மற்றும், உளுந்தூர்பேட்டையில் அக்கட்சி சார்பில் நடைபெறும் மாநாடு காரணமாக, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உளுந்தூர்பேட்டை நோக்கி நேற்று சென்றனர். இதன் காரணமாக வடலூர், குறிஞ்சிப்பாடி சுற்றுப்பகுதிகளில் நெடுஞ்சாலை அருகில் உள்ள அரசு மதுபான டாஸ்மாக் கடைகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. சில மதுபான கடைகள் 12:00 மணிக்கு திறக்கப்பட்டு, 1:00 மணி அளவில் மீண்டும் அடைக்கப்பட்டன. இது குறித்து போலீசார் கூறியதாவது : வி.சி., கட்சி மாநாடு உளுந்தூர்பேட்டை பகுதியில் நடப்பதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டும், அரசு மதுபான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை