உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம் நடந்தது.வட்டார தலைவர் ரவிசுந்தர் தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட தலைவர் குருராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிற்றரசன் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் லுார்துராஜ் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலகத்தை ஸ்ரீமுஷ்ணத்தில் அமைக்க வேண்டும்.காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் பணிபுரியும் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தைச் சார்ந்த அங்கன்வாடி பணியாளர்களை தனியாக பிரித்தல், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.முன்னாள் வட்டார பொருளாளர் துரைக்கண்ணு, தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.வட்டார பொருளாளர் மெகருன்னிசா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ