உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் உண்டியல் திறப்பு ரூ.13.24 லட்சம் காணிக்கை

கோவில் உண்டியல் திறப்பு ரூ.13.24 லட்சம் காணிக்கை

விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல்களில், 13 லட்சத்து 24 ஆயிரத்து 433 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் மூலம் வந்துள்ளது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள 9 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 1 திருப்பணி உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா முன்னிலையில் தன்னார்வலர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். அதில், பக்தர்கள் காணிக்கை மூலம் 13 லட்சத்து 24 ஆயிரத்து 433 ரொக்கம், 6 கிராம் தங்கம், 111 கிராம் வெள்ளிப்பொருட்கள் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ