உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செல்லியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்

செல்லியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் கும்பாபிேஷக ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழாவையொட்டி கணபதி ஹோமங்கள் நடந்தது.108 பெண்கள் பால் குடங்களை எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். உலக அமைதிக்காக அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடத்தினர். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் செல்லியம்மன் சிறப்பு அலங்காரத்தில் குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கரும்புகளால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. பூஜைகளை பூசாரி ராமு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ