வேகத்தடையில் பெயிண்ட் அடித்த கவுன்சிலர்
நெல்லிக்குப்பம் : பத்துக்களை தடுக்க சாலை வேகத்தடையில், நகராட்சி கவுன்சிலர் பெயிண்ட் அடித்ததார்.நெல்லிக்குப்பம் பங்களா தெருவில் சில மாதங்களுக்கு முன் புதியதாக சிமன்ட் சாலை அமைத்தனர். அந்த தெருவில் அடிக்கடி நடக்கும் வாகன விபத்துகளை தவிர்க்க, சாலையின் குறுக்கே வேகத்தடை அமைத்தனர். ஆனால் வேகத்தடை இருப்பதை அறியும் வகையில் அதன்மீது வெள்ளை பெயிண்ட் அடிக்கவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்தில் சிக்கினர். இதையறிந்த அப்பகுதி கவுன்சிலர் சத்தியா, தனது செலவில் பெயிண்ட் வாங்கி வேகத்தடை மீது தானே அடித்தார்.