பைப் உடைந்து குடிநீர் வழிந்தோடியது
கடலுார்: கடலுார், செல்லங்குப்பம் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. கடலுார்-சிதம்பரம் சாலையில் செல்லங்குப்பத்தில் நேற்று காலை குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இந்த தண்ணீர் சாலை முழுதும் குளம்போல் தேங்கி நின்றது. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் தண்ணீரை பக்கவாட்டில் வாரி இறைத்தபடி சென்றன. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். வெளியில் இருந்து வாகனங்களில் வரும் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தினர். பிரதான குடிநீர் பைப்பில் ஏற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.